நவ தெலுங்கானா
Appearance
வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | தாள் |
உரிமையாளர்(கள்) | வீரய்யா |
நிறுவியது | 2015 ஆம் ஆண்டு |
மொழி | தெலுங்கு மொழி |
தலைமையகம் | ஐதராபாத்து,தெலுங்கானா |
இணையத்தளம் | http://navatelangana.com |
நவ தெலுங்கானா (Nava Telangana) என்பது தெலுங்கு மொழியில் செய்திகளை வெளியாகும் நாளேடு.[1] இது தெலங்காணா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 2015 ஆண்டு மார்ச் 21 அன்று தெலங்காணா மாநில விவசாயத் துறை அமைச்சர் போச்சாரம் சீனிவாஸ் ரெட்டியால் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. தற்போது தெலங்காணாவில் மகபூப்நகர், ஐதராபாத், கரிம்நகர், கம்மம், ரங்காரெட்டி , வாரங்கல், போன்ற நகரங்களில் இருந்து ஆறு பதிப்புகளாக வெளியாகின்றது.
இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.[2]